அதிகரிக்கும் கொரோனா – மக்கள் பதற்றப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

தமிழகத்தில், உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை  தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி 

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ‘மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது தமிழகத்தில், உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. இதனால் மக்கள் பதற்றப்பட தேவையில்லை. கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது.

H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்