பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 243 புள்ளிகள் அதிகரித்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 243 புள்ளிகள் அதிகரித்து 57,872 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,051 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 57,963 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 243 புள்ளிகள் அல்லது 0.42 % என அதிகரித்து 57,872 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 63.10  புள்ளிகள் அல்லது 0.37% அதிகரித்து 17,051 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,628 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,988 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

எச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஸ் லேபரட்டரீஸ், ஐடிசி லிமிடெட், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்