இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு..! பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர்..
வேளாண் பட்ஜெட் உரையில் இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்திருந்தார்.
அந்தவகையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.