தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை; பட்ஜெட்டில் அறிவிப்பு.!
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் தக்காளி மற்றும் வெங்காயம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், தக்காளி மற்றும் வெங்காயம் அவ்வப்போது பற்றாக்குறை மற்றும் விளைச்சல் காரணமாக விலையேற்றம் மற்றும் இறக்கம் காணப்படுவதுண்டு. இந்தநிலையில் தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுதும் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்காக தக்காளிக்கு ₹19 கோடியும், வெங்காயத்துக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.