விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல திட்டம் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல திட்டம்.
இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல திட்டம்
இந்த நிலையில், விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வண்ணம், விவசாயிகளை வெளிநாடு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் என அறிவித்துள்ளார்.