விவசாயிகளுக்கு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு – வேளாண் அமைச்சர் அறிவிப்பு
வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
விவசாசயிகளுக்கு வாட்ஸ்ஆப் குழு
இதில் விவசாயத்தையும், விவசயிகளையும் ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.