பயிர் சந்தேகம் தீர்க்க வேளாண் விஞ்ஞானி, எண்ணெய் வித்துகளுக்கு 33கோடி நிதி-அமைச்சர்.!
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் எண்ணெய் வித்துகளின் உற்பத்திக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் பொருட்டு 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், மேலும் சூரியகாந்தி, நிலக்கடலை எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்கும் விதமாக ரூ.30 கோடி நிதிஒதுக்கீடும், பயிர் சாகுபடி மற்றும் வேளாண் துறை குறித்த சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.