விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்
விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும். இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.