கிராமங்களின் வளர்ச்சி திட்டத்திற்கு 230 கோடி நிதி; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.!
வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் கிராமங்களின் வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், அனைத்து கிராமங்களின் வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி ஆழ்துளைக்கிணறுகள், பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும்.
மேலும் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்டாவில் 5,36,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், சாகுபடி பரப்பளவிலும் 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளதாகவும் அறிவித்தார்.