TNAgricultureBudget2023 Live : விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்..!

Default Image

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

  • காவிரி டெல்டா பகுதியில் திருச்சி -நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் சிறுதானிய உணவக சிற்றுண்டி நிலையம் அமைக்கப்படும். இதன் முதற்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
  • விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து, ‘GRAINS’ இணையதளம் அறிமுகப்படுத்தப்படும், இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும்
  • சன்ன ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.100, பொது ரக நெல்லுக்கு ரூ.75 ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை.
  • விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ1,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும்.
  • அதிக வரத்துள்ள  100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ,50 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும்.
  • 27 சேமிப்பு கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சியங்கள் மேம்படுத்தப்படும்.
  • காவிரிநீர் கடைமடை வரை சென்று சேர ரூ.1,146 கி.மீ. தொலைவு வாய்க்காலை தூர்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு சிற்றுண்டி, மூலிகை சூப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • தஞ்சையில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதாக புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும்.
  • பனை சாகுபடியை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை இயந்திரங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வாழைக்காக தனித் தொகுப்பு திட்டத்திற்காக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • காவிரி படுகை உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுக்க ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க நடவடிக்கை.
  • தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க தக்காளிக்கு ரூ.19 கோடியும், வெங்காயத்துக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ள விவசாயிகளை வெளிநாடுகள் அழைத்துச் சென்று பயிற்சியளிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விவரிக்க அலுவலரை நியமிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0.
  • கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நுண்ணீர் பாசன முறையை பின்பற்றி நிலத்தடி நீரை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.650 கோடியில், 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்.
  • தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், ரூ.19 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
  • சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு.
  • கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பயிர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மாநில அரசின் பயிர் காப்பீட்டு மனியத்திற்கு ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்.
  • உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த பண்ணையத்தை ஊக்குவிக்க ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க 14 மண்டலங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம். ரூ.33 கோடி ஒதுக்கீட்டில் நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.
  • தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்க்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற திட்டம்.
  • மின்னணு உதவிமையங்களை செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் உருவாக்கப்படும்.
  • விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பாங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்.
  • ஆதித்திராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு 20% மானியம் . மானியங்கள் வழங்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு லட்சம் ஏக்கரில் மாற்று சாகுபடியை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண் மாணவர்கள் 200 பேருக்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.
  • வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும்.
  • ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
  • வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.
  • கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு.
  • புன்செய் நிலங்களுக்கு நிலங்களுக்கு உரிய பயிர்களை அறிமுகம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை. கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை.
  • பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2,064 கிராமங்களில் விவசாயிகளை உள்ளடக்கிய வேழான் முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும்.
  • 5 மாவட்டங்களில் சிறுதானிய மணடலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசால் ரூ.1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • நீர் நிலைகளை தூர் வாரியதால் நிலத்தடி நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
  • கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது.
  • நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை  எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட்:

இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பச்சை நிற துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy (2)
Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin