ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனருக்கு 1 கோடி பரிசு – தமிழக அரசு அறிவிப்பு.!
ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் இயக்குனருக்கு 1 கோடி பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தை பெண் இயக்குனர் கார்த்திகி என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் 95-வது ஆஸ்கர் விருது விழாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. விழாவில் கலந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர்கள் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
இந்த நிலையில், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்கு இன்று தமிழக அரசு 1 கோடி பரிசு வழங்கியுள்ளது. கார்த்திகிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
ஆவணக் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இந்தியா திரும்பிய நிலையில், அவரை நேரில் அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.