அதிகரிக்கும் கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.