45லட்சம் சம்பளம், இந்தியாவில் 45,000 க்கும் மேற்பட்ட AI வேலை வாய்ப்புகள்; சூப்பர் அப்டேட்.!
இந்தியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான 45,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக தகவல்.
செயற்கை நுண்ணறிவு (AI) மயமாக்கப்பட்ட உலகில் தற்போது அதன் பயனும் அதிகரித்துவரும் வேளையில் அதற்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன்படி இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் (ML) பொறியாளர்கள் அதிக தேவை உள்ள தொழில்களில் கிட்டத்தட்ட 45,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக TeamLease Digital என்ற தொழில்நுட்ப நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அளவிடக்கூடிய இயந்திர கற்றல் எம்எல் (ML) பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது, ஸ்கிரிப்டிங் மொழிகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் வழக்கமான ML மாதிரிகளை உருவாக்கும் திறன் கொண்ட AI நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
டேட்டா மற்றும் எம்எல் இன்ஜினியர்கள் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கலாம், டேட்டா ஆர்கிடெக்ட்கள் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதே போன்ற துறைகளில் எட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.25 முதல் 45 லட்சம் வரை அதிக சம்பளம் பெறலாம் என்றும் அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுமார் 56 சதவீத நிறுவனங்கள் AI தேவையுள்ள திறமையான பணியாளர்களை நிரப்ப தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.