கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்; சீமான்.!
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிய பட்ஜெட் என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மின்னணு வடிவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகியது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் நிறை குறைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பட்ஜெட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எந்தவித அறிவிப்பும் இல்லை.
கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. மதுக்கடைகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்த்த திட்டமிட்டுள்ளதை விமரிசித்த சீமான், மாதாமாதம் மின்கணக்கீடு செய்து மின்கட்டணம் செலுத்தும் முறை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று கூறியிருந்தார்.