இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.
வேளாண் பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், இன்று தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.