ரூ.8,500 கோடி.! மதுரை மக்களின் சார்பாக நன்றி.! எம்பி சு.வெங்கடேசன் டிவீட்.!
தமிழக பட்ஜெட்டில் மதுரையில் மெட்ரோ அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை போல, மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ சேவைகள் வரவுள்ளது என அறிவித்தார். மதுரைக்கு 8,500 கோடி ரூபாயிலும், கோவைக்கு 9,000 கோடி ரூபாயில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
இதனை குறிப்பிட்டு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அதில், ‘ மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணப்பட ‘மதுரை மெட்ரோ திட்டம்’ அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 8500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
மதுரையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு காணப்பட “மதுரை மெட்ரோ திட்டம்” அறிவிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 8500 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு மதுரை மக்களின் சார்பில்
நன்றி. @pmoorthy21@ptrmadurai pic.twitter.com/z1mKsCNr1v— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 20, 2023