TN Buget Education: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி, மருத்துவத்துறை ரூ.18,661 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு என நிதியமைச்சர் அறிவிப்பு.

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது, பட்ஜெட் உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வரும் ஆண்டில் ரூ.1,500 கோடியில் பள்ளி கல்வித்துறையில்  வகுப்பறைகள் கட்டப்படும். ரூ.110 கோடி செலவில் 4, 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை உள்ளிட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்து துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறை கீழ் செயல்படும் என தெரிவித்தார். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம் மற்றும் செவிலியர் விடுதி கட்டப்படும். 711 தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு மக்களை தேடுக மருத்துவம் விரிவுபடுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment