இபிஎஸ்-ஐ தொடர்ந்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவை வந்தார் ஓபிஎஸ்!
எதிர்க்கட்சி துணை தலைவரும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் சட்டப்பேரவைக்கு வருகை.
2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக கூட்டத்தொடர் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பழனிசாமி வருகை புரிந்த நிலையில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டபேரவையில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்தும், சட்டப்பேரவையில் அதிமுருகவின் செயல்பாடுகள் குறித்து கட்சி எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவரும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்.