திமுக வாக்குறுதிகள், புதிய திட்டங்கள்! இன்னும் சற்று நேரத்தில் தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்!
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சற்று நேரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலான பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது முதல் வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 2-வது முழு பட்ஜெட் தாக்கல் மற்றும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இதுவாகும்.