Today’s Live : அம்ரித்பால் சிங் தப்பிச் செல்ல உதவிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

Default Image

வாரிஸ் பஞ்சாப் டி :

பஞ்சாபில் வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங், பிரெஸ்ஸா காரில் தப்பிச் செல்ல உதவிய மன்பிரீத், குர்தீப், ஹர்பிரீத் மற்றும் குர்பேஜ் ஆகிய நான்கு பேர் ஜலந்தரில் உள்ள ஷாகோட் காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


22.03.2023  06.00 PM

பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கொரோனா தொடர்பான நிலைமை மற்றும் பொது சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில் தொங்கியது. இந்த கூட்டத்தில், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

MODI HIGH LEVEL MEETING

22.03.2023  04.50 PM

சட்டசபையில் தீர்மானம் :

உள்ளாட்சி மன்ற அமைச்சர் டாக்டர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜர், விதான் சபாவில் “ஷாஹீத் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் கனவுகளின் பஞ்சாபை” அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு உருவாக்குவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

22.03.2023  01.40 PM

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் :

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு முன் கட்சியிலிருந்து கருத்து கேட்கப்படவில்லை. நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்றும் வழக்கை வாபஸ் பெறவும் தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

22.03.2023  12.59 PM

கொரோனாவில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ் :

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது என ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளிட்டுள்ளது. மேலும் இருதய பாதிப்புக்கு ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

SRMC

22.03.2023  12.15 PM

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிதிநிலை மதிப்பீடு :

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை மதிப்பீடு ரூ.4,411.68 கோடியாக நிர்ணயித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவிதுள்ளார். 2022-23 நிதியாண்டில், உண்டியல் மூலம் ரூ.1,613 கோடி வருவாய் கிடைத்த நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.1,591 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tirupathi Budget

22.03.2023  11.13 AM

அதிமுக பொதுக்குழு தீர்மானம் : 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இதில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன.

22.03.2023  10.41 AM

ஆதார் எண்-வாக்காளர் அட்டை இணைப்பு :

வாக்காளர் அட்டை-ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருட காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 31 வரை நீட்டித்து, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

22.03.2023  10.20 AM

அடுத்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்:

ரூ294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில், தாம்பரம் – செங்கோட்டை ரயில் சேவைகளையும் தொடக்கி வைக்க இருக்கிறார்.

21.03.2023  4.50 PM

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது:

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பார்த்திபன் கேள்வி எழுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மக்களவையில் ஒன்றிய தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்துள்ளார்.

21.03.2023  4.35 PM

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை:

பங்குனி உத்திர திருநாள் 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

21.03.2023  4.20 PM

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு ஏற்பாடு:

சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியை முன்னிட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ முதல் சேப்பாக்கம் மைதானம் வரை, நாளை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச சிற்றுந்து சேவை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

21.03.2023  4.00 PM

அதானி விவகாரம் :

தானி விவகாரம் குறித்து பிஆர்எஸ் எம்பி கே கேசவ ராவ் கூறுகையில், “இது ஒரு ஊழலும் இல்லை, ஒரு மோசடியும் அல்ல, அதை விட அதிகம். இது லட்சக்கணக்கான ரூபாய்கள் மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் உள்ளடக்கியது, இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மக்களின் பணத்தையும் பாதிக்கும். நாங்கள் யாருடைய தயவையும் கேட்கவில்லை, ஆனால் மோசடியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நம்பகமான நிறுவனம் மூலம் விசாரிக்கலாம்” என்று கூறினார்.

21.03.2023  3.00 PM

நாடாளுமன்ற மாடியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்:

அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற முதல் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

21.03.2023  1.00 PM

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சிரிப்பலை:

‘மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம், தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம்’ என வேளாண் பட்ஜெட் வாசிக்கும் போது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலையால் நிரம்பியது.

21.03.2023  12.15 PM

இரு அவைகளும் ஒத்திவைப்பு:

அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு தனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.

மேலும், மாநிலங்களவையும் இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்ததோடு, அதற்கு முன்னர் 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

21.03.2023  11.30 AM

ரேசன் அட்டைதாரர்களுக்கு :

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

21.03.2023  11.15 AM

பிரதமர் மோடி ஆலோசனை:

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான நாடாளுமன்ற உத்திகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

21.03.2023  11.00 AM

ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கிய மு.க.ஸ்டாலின்

ஆஸ்கர் விருது வென்ற, “The Elephant Whisperers” ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

21.03.2023  10.50 AM

29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமல் செய்யப்படவுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

21.03.2023  10.40 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்