பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 355 புள்ளிகள் அதிகரித்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 355 புள்ளிகள் அதிகரித்து 57,989 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,100 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 58,038 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 355 புள்ளிகள் அல்லது 0.62% என அதிகரித்து 57,989 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 114.45 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 17,100 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,985 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

எச்.சி.எல் டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐடிசி லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, என்டிபிசி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், யுபிஎல் லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐச்சர் மோட்டார்ஸ், ஐடிசி லிமிடெட், என்டிபிசி லிமிடெட், மாருதி சுசுகி இந்தியா, சிப்லா லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்