ஜி.கே.வாசனுக்கு பகிரங்க அழைப்பு.! அவருக்கு கீழ் பணியாற்ற தயாராக உள்ளேன்.! – கே.எஸ்.அழகிரி பேச்சு.!
ஜி.கே.வாசனும் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற வேண்டும். அவருக்கு கீழ் பணியாற்றுவதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.
மதுரையில் காளவாசல் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொது கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வில், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், தங்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தனர்.
காமராஜர் – மூப்பனார் :
அந்த நிகழ்வில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியை காமராஜருக்கு பின்னர் சிறப்பாக வழிநடத்தியவர் மூப்பனார். தமிழகத்தில் தேசிய இயக்கம் என்றால் நமது நினைவுக்கு வருவது காமராஜரும், மூப்பனாரும் தான். என குறிப்பிட்டார்.
ஜி.கே.வாசனுக்கு அழைப்பு :
பிறகு பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் என்ன பிரச்சனை என்றால் , அவர்கள் தனி நபர்களை பெரிய நபர்களாக நினைப்பதால் தான் சிரமப்படுகிறது என குறிப்பிட்ட அவர், ஜி.கே.வாசனும் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற வேண்டும். அவருக்கு கீழ் பணியாற்றுவதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. என குறிப்பிட்டு பேசினார்.