INDvsAUS ODI: ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளதால் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட்களும், சான் அப்பாட் 3 விக்கெட்களும், நேதன் எல்லிஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
118 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஷ்(66* ரன்கள்) மற்றும் ஹெட் (51* ரன்கள்) அதிரடியால் 11 ஒவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.