பாலியல் வன்கொடுமை’ கருத்துக்கு ராகுல் காந்தி விளக்கமளிப்பார்- டெல்லி காவல்துறை.!

Default Image

ஒற்றுமை யாத்திரையில் ராகுல் கூறிய பாலியல் வன்கொடுமை கருத்துக்கு அவர் விளக்கமளிப்பார் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஒற்றுமை யாத்திரையின் ஸ்ரீநகர் உரையின் போது, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என அவர் கூறியிருந்தார். ராகுலின் பாலியல் வன்கொடுமை கருத்துக்கு அவர் விளக்கமளிக்க காவல்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை, இன்று ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்றனர்.

பாலியல் வன்கொடுமை குறித்து ராகுலிடம் தெரிவித்த பெண்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டிருந்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ், பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ஸ்ரீ ராகுல் காந்தியின் கேள்விகளால் பதற்றமடைந்த அரசாங்கம், அதன் காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டது.

யாத்திரை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை நோட்டீஸ் மூலம், பெண்களின் விவரங்களைக் கேட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தது. நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதிலளிப்போம். இந்த நோட்டீசுக்கு பதில் அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தும், அதற்கு தீர்வு காணாததால் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியின் வீட்டிற்குள் சென்றதாக தகவல் வெளியானது. இதன்பிறகு பதிலளித்த காவல்துறை, ராகுல் காந்தியுடன் நாங்கள் ஒரு சந்திப்பு நடத்தினோம். நாங்கள் கேட்ட தகவல்களை தருவதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும், ராகுல் கூறினார்.

இன்று நாங்கள் ஒரு நோட்டீஸை வழங்கியுள்ளோம், அது அவரது அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பெண்களுக்கு தேவையான உரிய நடவடிக்கைகளை தொடங்குவோம் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்