# IND VS AUS ODI LIVE: ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

Default Image

ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது.

118 இலக்குகளுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்ரேலியா அணி 1 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 2 ரன்கள் எடுத்துள்ளது.

ஆல் அவுட் ஆன இந்தியா 

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 117-ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

திணறும் இந்திய அணி 

23 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்துள்ளது. தற்போது அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் பேட்டிங் செய்து வருகிறார்கள்.

5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா  

ஏற்கனவே 4-விக்கெட்களை இழந்த இந்திய அணி 51 ரங்களுக்கு 5-வது விக்கெட்டையும் தற்போது இழந்துள்ளது.

ரோகித் சர்மா 13, சுப்மான் கில் 0, சூர்யகுமார் யாதவ் 0, கே ராகுல் 9, ஹர்திக் பாண்டியா 1 ரன் எடுத்தனர். தற்போது விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இருவரும் பேட்டிங் செய்து வருகிறார்கள்.

திணறும் இந்திய அணி 

ஏற்கனவே 3-விக்கெட்களை இழந்த இந்திய அணி 4-வது விக்கெட்டையும் தற்போது இழந்துள்ளது. நன்றாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். 4-விக்கெட்களையும் ஆஸ்ரேலியா அணி வேக பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தான் 5 ஓவர்கள் பந்து வீசி எடுத்துள்ளார்.

3 விக்கெட்களை இழந்த இந்தியா

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் 2 பந்துகளில் Duck Out ஆனார் சுப்மன் கில்.  அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பிறகு சூர்யா குமார் யாதவும் 0 ரன்களில் வெளியேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்