குழந்தை பிறந்த பிறகும் மகப்பேறு விடுப்புக்கு பெண்களுக்கு உரிமை உண்டு – உயர்நீதிமன்றம்!
குழந்தை பெற்ற பிறகும் பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பில் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு உரிமை உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு:
குழந்தை பெற்ற பிறகும் பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பைப் பெறுவதற்கான விருப்பம் பெண்களுக்கு உள்ளது என்பதற்காக மகப்பேறு விடுப்பின் நன்மையை மறுக்க முடியாது.
மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு ஆகியவை வெவ்வேறு நன்மைகள் மற்றும் அவற்றின் நோக்கங்களும் வேறுபட்டவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த இரண்டு சலுகைகளையும் பெற பெண் ஊழியருக்கு உரிமை உண்டு என கூறியுள்ளது.
கல்வி அலுவலர் மறுப்பு:
முன்னதாக மகப்பேறு விடுப்புக்காக அடிப்படைக் கல்வி அலுவலரிடம் சரோஜ் குமாரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் நவம்பர் 14, 2022 அன்று அவரது விண்ணப்பத்தை அலுவலர் நிராகரித்துள்ளார்.
மனுதாரரின் குழந்தை பிறந்துவிட்டதால் அவருக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு விருப்பம் உள்ளது. மனுதாரர் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு கேட்டிருந்தார், எனவே இப்போது அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவு:
எட்டா உதவி ஆசிரியை சரோஜ் குமாரியின் மனுவை ஏற்று நீதிபதி அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், குழந்தை பிறந்த பிறகும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் என்று கூறியுள்ளது.
மகப்பேறு நலச் சட்டத்தின் கீழ், குழந்தை பிறப்பதற்கு முன்னும் பின்னும் மகப்பேறு விடுப்பு எடுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு . இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.
பிஎஸ்ஏ(Basic Education Officer)சட்டத்தைப் புரிந்துகொள்வதில் தவறு செய்துவிட்டது மற்றும் சம்பளத்தை நிறுத்துவதற்கான உத்தரவும் சட்டவிரோதமானது. மனுதாரருக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. அவர் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு இரண்டையும் எடுக்கலாம்.
மனுதாரருக்கு நிலுவைத் தொகையுடன் வழக்கமான சம்பளத்தை வழங்குமாறு ஹிராபூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்குமாறு பிஎஸ்ஏக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.