INDvsAUS ODI: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங்.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா மீண்டும் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், சமநிலை வகிக்க இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியாவும் களம் காணுகின்றன. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல்(W), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி
ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(C), மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி(W), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா