நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நேற்று சிவகங்கை மாவட்டம் குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி (10), மகேந்திரன்,லெட்சுமணன் (07), மற்றும் சந்தோஷ் லெட்சுமணன் (05) ஆகிய மூன்று பெரும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதைப்போல மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் (16) என்பவரும் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து விட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கபடும் எனவும் அறிக்கையை வெளியீட்டு அறிவித்துள்ளார்.
சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/LdVvxuVVQv
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 19, 2023