அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் பரபரப்பு உத்தரவு..! இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்..!
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் உத்தரவு பிறபித்த நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்.
பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு :
அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
முடிவை வெளியிடக்கூடாது :
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதி கூறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு தடை கோரிய வழக்கிற்கு மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம் :
இந்நிலையில் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதில் தேர்தல் நடத்தலாம் என்ற முடிவிற்கு இபிஎஸ் தரப்பினரும், தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்பதற்கு இபிஎஸ் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.