ஒற்றுமை யாத்திரையில் ராகுலின் ‘பாலியல் வன்கொடுமை’ கருத்துக்கு விளக்கம் தேவை; வீட்டிற்கு விரைந்த டெல்லி போலீசார்.!
ஒற்றுமை யாத்திரையில் ராகுல் கூறிய பாலியல் வன்கொடுமை கருத்துக்கு விளக்கமளிக்க அவரின் வீட்டிற்கு டெல்லி போலீசார் சென்றுள்ளனர்.
ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தி தலைமையில் நடந்த ஒற்றுமை யாத்திரையின் ஸ்ரீநகர் உரையின் போது, ராகுலின் பாலியல் வன்கொடுமை கருத்து குறித்த நோட்டீசுக்கு பதில் அளிக்கக் கோரி டெல்லி காவல்துறை குழு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்திற்கு சென்றுள்ளது. ஒற்றுமை யாத்திரையில் ஸ்ரீநகர் உரையின் போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என கூறியிருந்தார்.
காவல்துறை நோட்டீஸ்: இதற்கு ராகுலுக்கு காவல்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை, ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். ராகுல் காந்தியிடம், பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்த பெண்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு போலீசார் அவரிடம் கேட்டனர். இதற்குப் பதிலளித்த காங்கிரஸ், “நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதிலளிப்போம்” என்று கூறியது.
காங்கிரஸ் பதில்: இது குறித்து ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ், பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ஸ்ரீ ராகுல் காந்தியின் கேள்விகளால் பதற்றமடைந்த அரசாங்கம், அதன் காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டது. யாத்திரை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை நோட்டீஸ் மூலம், பெண்களின் விவரங்களைக் கேட்டுள்ளது.
अडानी के साथ PM मोदी के रिश्ते पर श्री राहुल गांधी के सवालों से बौखलाई सरकार पुलिस के पीछे छिप रही है।
भारत जोड़ो यात्रा के 45 दिन बाद राहुल गांधी जी को दिल्ली पुलिस ने नोटिस दिया है, जिसमें उन महिलाओं की जानकारी मांगी गई है जो उनसे मिलीं और खुद के उत्पीड़न के बारे में बात की। pic.twitter.com/fgioVK413V
— Congress (@INCIndia) March 16, 2023
நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதிலளிப்போம். இந்த நோட்டீசுக்கு பதில் அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தும், அதற்கு தீர்வு காணாததால் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியின் வீட்டிற்குள் சென்றதாக தகவல் வெளியானது.
வீட்டில் இருந்த சிறப்பு சிபி சாகர் ப்ரீத் ஹூடா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவருடன் பேசுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது பல பெண்களைச் சந்தித்ததாகவும், அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தன்னிடம் கூறியதாகவும் அறிக்கை அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அவரிடமிருந்து விவரங்களைப் பெற முயற்சிக்கிறோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.