மாமல்லபுரத்தில் சர்வதேச தரத்திலான கால்பந்து வளாகம் திறப்பு.!

Default Image

FC மெட்ராஸ் அணி சார்பில், மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான கால்பந்து வளாகம் திறக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் லட்சிய உள்ளூர் கால்பந்து கிளப்பான FC மெட்ராஸ், சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில்  உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது.

‘ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த வசதி, ஏஐஎஃப்எஃப் (அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு) மற்றும் ஏஎஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) ஆகியவற்றால் குறிப்பிடப்பட்ட FIFA தரநிலைகளின்படி கட்டப்பட்டுள்ளது.

சுமார், 23 ஏக்கர் வளாகத்தில் கிழக்கு ஆசியாவின் இரண்டாவது கலப்பின ஆடுகளம், வலிமை மற்றும் சீரமைப்பு மையம், ஃபுட்சல் பிட்ச், நீச்சல் குளம், தங்கும் விடுதி மற்றும் அதைத் தொடர்ந்து வரும் மாற்றுக் கற்றல் மையம் உள்ளிட்ட மூன்று அதிநவீன  ஜொலிக்கும் ஒளி விளக்குகளுடன் ஆடுகளங்கள் என பல்வேறு சிறப்பு  இடம்பெற்றிருக்கும் பெரிய வளாகமாக கட்டப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்