கல்யாணத்துக்கு ஓகே… நடிகை அஞ்சலிக்கு விரைவில் ‘டும்..டும்..டும்’.! வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

நடிகை அஞ்சலி 36 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் அடிக்கடி இவருடைய திருமணம் குறித்த சில வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது உண்டு.

Anjali
Anjali [Image Source : Google ]

அந்த வகையில், கடந்த ஆண்டு கூட அஞ்சலி பிரபல இயக்குனர் ஒருவரை விரைவில்  திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தீயாய் ஒரு தகவல் பரவியது. பிறகு அதற்கு இது வெறும் வதந்தி என அஞ்சலி விளக்கம் கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலிக்கு மீண்டும் திருமணம் நடைபெறவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Anjali
Anjali [Image Source : Google ]

அஞ்சலிக்கு அவருடைய பெற்றோர் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், அதற்கு அஞ்சலியும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான திருமண செய்திக்கு இது உண்மை இல்லை என அஞ்சலி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் இம்முறை அஞ்சலி மறுப்பு எதுவும் சொல்லாமல் இருப்பதால் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்ப தொடங்கி உள்ளனர்.

Anjali SMILE
Anjali SMILE [Image Source : Google ]

மேலும். நடிகை அஞ்சலி கடைசியாக மலையாளத்தில் இரட்டா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்