இனி அமெரிக்காவிலும் விசில் பறக்கும்; சிஎஸ்கே வின் புதிய அணி.!
அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் டெக்சாஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ்வாங்கியுள்ளது.
உலக அளவில் பிரபல கிரிக்கெட் லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணி, தற்போது அமெரிக்காவிலும் தனது கொடியை பறக்க விடப்போகிறது. அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில், சிஎஸ்கே அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
நான்கு முறை ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை அணி, அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் அணிக்கான உரிமையை பெற்றுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சிஎஸ்கே அணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
Show some yellove to our NRI cousin, @TeamTexasMLC! ???? #HowdyTexas #MajorLeagueCricket pic.twitter.com/OvsntNUig3
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2023