மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா..? இயக்குநர் அமீர் பேச்சு..!

Default Image

இயக்குனர் அமீர் தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இவர் சமீபத்தில் ‘செங்களம்’ வெப் தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்ரைலர் விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமீரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

Ameer
Ameer [Image Source : Google ]

அப்போது ஆஸ்கர் விருதுகளை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அமீர் ” சிறந்த விருதுகள் எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே இப்போது எல்லாம் வழங்கப்பட்டு விருதுகள் அனைத்துமே வெறும் லாபி தான்.

ameer and rajinikanth
ameer and rajinikanth [Image Source : Google ]

ஷங்கர்  இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் நடித்ததற்காக, ரஜினிகாந்துக்கு மாநில அரசு  சிறந்த நடிகர் என்ற பிரிவில் விருது மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா? அவர் சிறந்த என்டர்டெயினர் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, இதுமட்டுமில்லாமல், சிவாஜி படத்தில் சிறந்த நடிப்பு இருந்ததா? என்று கேள்வியை எழுப்பினார்.

Ameer Sultan
Ameer Sultan [Image Source : Google ]

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போன்ற படங்களில் தான் ரஜினி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் எதற்காக இந்த படங்களுக்காக  ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை” என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்