கோடை மழை.! பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய சாலை வெள்ளத்தில் சிக்கியது.!
பெங்களூருவை அடுத்த ராமநகரா மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியால், பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். 118 கிமீ தூரமுள்ள இந்த சாலையானது பெங்களூரு – மைசூரு இடையேயான பயண தூரத்தை பாதியாக குறைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 8,489 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
தேங்கிய மழைநீர் :
இந்நிலையில் சில நாட்களாக கர்நாடகாவில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, பெங்களூருவை அடுத்த ராமநகரா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
வெள்ளத்தில் தேசிய நெடுஞ்சாலை :
கடந்த வெள்ளி இரவு பெய்த கனமழையால் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிய தேசிய நெடுஞ்சாலையில் அந்த ராம்நகரா பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன நெரிசல் மிக அதிகமாக இருந்துள்ளது. இதனால் மெதுவாக வாகனங்கள் நகர்ந்து வருகின்றன.