குட்ட குட்ட நாங்கள் குனிய மாட்டோம் – ஜெயக்குமார்
குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளித்த ஜெயக்குமார்
அவர் கூறுகையில், அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக நிர்வாகிகள் இடையே பேசியதற்கு பொதுவெளியில் கருத்து சொல்ல முடியாது, அதிமுகவை தலைமையாக ஏற்று கூட்டணி அமைக்க முன்வருபவர்களுடன் நாங்கள் இணைவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை. யாரையும் கூட்டவும் விடமாட்டோம். குனியவும் மாட்டோம். எதையும் சகித்து விட்டு நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எந்தவித அவசரத்திலும் நடைபெறவில்லை. அது முறைப்படிதான் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.