தாலிக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியாதா..? திருமண செய்திக்கு கடுப்பான அபிராமி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரில் வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் கழுத்தில் தாலி கட்டி இருந்தது போல இருந்தார். எனவே இதனை பார்த்த சில ஊடகங்களும், நெட்டிசன்கள் அபிராமிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகளை பரப்பினார்கள்.
இதனையடுத்து, இந்த திருமண வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அபிராமி ” நோன்பு சரடுக்கும், தாலிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா..? இது போல ஒரு பொய்யான செய்திகளை எழுதுபவர்களுக்கு மூளை இறங்கி மூட்டிக்கு வந்துவிட்டது என்று சந்தேகமாக இருக்கிறது” என கோபத்துடன் பேசியுள்ளார்.
மேலும், நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.