ஹைதராபாத் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..! வெளியாகிய வீடியோ…
ஹைதராபாத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் பகதூர்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பகதூர்புரா, அன்சாரி சாலையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் இருந்து தீப்பிழம்புகள் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுள்ளார்.
மக்கள் அளித்த தகவலின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பகதூர்புரா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களுக்கு உதவினார்கள்.
பிளாஸ்டிக் குடோனிற்கு அருகில் இருந்த டிஎம்ஆர்ஐஇஎஸ் பெண்கள் விடுதியில் புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விடுதியில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள விழா அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
A major fire broke out at a plastic factory in Bahadurpura Ansari Road 10 fire tenders from @TelanganaFire were pressed into service pic.twitter.com/8MBQbmSmE2
— S.M. Bilal (@Bilaljourno) March 18, 2023