யூ.பி.எஸ்.சி.யின் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது..!
யூ.பி.எஸ்.சி.யின் முதல்நிலை தேர்வை நாடு முழுவதும் இன்று, சுமார் 3 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 28 பதவிகளுக்காக, யூ.பி.எஸ்.சி. நிர்வாகம் இந்தத் தேர்வை நடத்துகிறது.
இன்று நடைபெறும் முதல்நிலைத் தேர்வுக்காக, சென்னையில் மாநிலக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல் தாள் தேர்வு, பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது.
இவ்விரு தாள்கள் தேர்வும் தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. முதல் தாள் தேர்வில் பொது அறிவு குறித்த 100 வினாக்களும், இரண்டாம் தாள் தேர்வில் திறன் (aptitude) அடிப்படையிலான 80 கேள்விகளும் கேட்கப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மெயின் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். தேர்வு நடைபெறும் மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.