இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி; சேப்பாக்கத்தில் இன்று காலை டிக்கெட் விற்பனை.!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று காலை தொடங்குகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 22இல் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் (ஐ,ஜே மற்றும் கே) புதிய கேலரியை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை இன்று காலை 11மணிக்கு சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. டிக்கெட்கள் விற்பனை ஆன்லைனில் தொடங்கப்பட்டதையடுத்து, நேரடி டிக்கெட்கள் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெகு நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவதால் இது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் நேற்றிரவு முதலே மைதானத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.