அக்னி வீரர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு.! பிஎஸ்எஃப்- ஐ தொடர்ந்து சிஐஎஸ்எஃப்-இலும் சேருவதற்கு சலுகைகள்..
மத்திய பாதுகாப்பு படையான CISF-இல் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய தேசிய முப்படைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அக்னி வீரர்கள் எனும் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 வருடம் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு சிலரே அந்த பணியில் நீட்டிக்கப்டுகின்றனர்.
10 சதவீத இடஒதுக்கீடு :
அக்னி வீரர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஏற்கனவே எல்லை பாதுகாப்பு படையான BSF-இல் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு உளிட்ட சலுகைகளை வழங்கியது.
CISF காலிப்பணியிடங்கள் :
தற்போது அதே போல அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு படையான CISF-இல் சேருவதற்கு சலுகைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள்ளது . அதன் படி , CISF-இல் காலியாக பணியிடங்களில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் உயர் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பில் முன்னாள் அக்னிவீரர்களின் முதல் வகுப்பு வீரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும், மற்ற வகுப்பு வேட்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் =, அவர்களுக்கு உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.