கலைஞருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் தோனி தான்; ஸ்டாலின் பெருமிதம்.!

Default Image

சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தனது தந்தைக்கு பிடித்த கிரிக்கெட்டர் தோனி என்று கூறினார். 

Kalaignar Stand mksmsd

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 139 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து, அதன் புதிய பெவிலியனை  நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த ஸ்டாண்டுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

kalaignar stand 1

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சி.எஸ்.கே கேப்டன் தோனி, பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகவும் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கம் மைதானத்தில், புதுப்பிப்பு பணிகளின் மூலம் தற்போது கூடுதலாக 5000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

mac stadium ms

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் கலைஞர் பெயரிடப்பட்ட இந்த புதிய பெவிலியனை, கலைஞருக்கு மிகவும் பிடித்த  தோனி மற்றும் என். சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைப்பதில் பெருமையாக உணர்கிறேன் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்