குடியரசு தலைவர் இன்று கன்னியாகுமரி வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருகை.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு 6 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.
குடியரசுத்தலைவர் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளாக இன்று கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரியில் நாளை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.