இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கும் சூப்பர் ஸ்டார்.!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்து வருகிறார் .
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் தொடர் இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து போட்டியை நேரில் கண்டுகளிக்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை மைதானத்திற்கு தனது மனைவி லதாவுடன் வருகை தந்துள்ளார்.
Thalaiva in the house ????
The President of Mumbai Cricket Association, Mr. @Amolkk1976 in conversation with the Superstar @rajinikanth during the #INDvAUS game at the Wankhede ????#MCA #Mumbai #Cricket #IndianCricket #Wankhede #BCCI pic.twitter.com/lvgmfL2gsp
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) March 17, 2023
மும்பைக்கு வந்த ரஜினியை அங்கிருந்த முக்கிய நபர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும். ரஜினிகாந்த் மைதானத்தில் இருந்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல்க் உடன் கிரிக்கெட் பார்த்து ரசிக்கும் வீடியோவும்,புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
Thalaivar #Rajinikanth to watch #India–#Australia #1on #MCA special invitation ????#SuperstarRajinikanth ???? pic.twitter.com/u64PqwfE2E
— DHEERAN CINIMAS ???? (@dheeran_cinimas) March 17, 2023
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை காண சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.