INDvsAUS ODI: டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங்.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
3 வருடங்களுக்கு பிறகு இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த காரணங்களுக்காக இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்பதால், முதல் ஒருநாள் போட்டிக்கு ஹர்டிக் பாண்டியா தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: ஷுப்மன் கில், இஷான் கிஷன்(W), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா(C), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி
ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(C), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(W), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சான் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா