நடிகர் ரோபோ ஷங்கரா இது..? வீடியோவை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்.!
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் உடல் எடை சற்று மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
????????????
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 16, 2023
மேலும், நடிகர் ரோபோ ஷங்கர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் உடல் எடை அதிகரித்தது போல இருந்த இவர் திடீரென மெல்ல மெல்ல மெலிய தொடங்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்றால், ரோபோ ஷங்கருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாம்.
எனவே, மஞ்சள் காமாலை காரணமாக தான் ரோபோ ஷங்கர் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறாராம். எனவே விரைவில் அவர் குணமடைந்து பல நிலைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் ரோபோ சங்கருக்கு அபராதமாக ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.