ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தெரியாது : சுப்பிரமணியன் சுவாமி

Default Image
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100வது நாள் போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் பாமர மக்களா, பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரிய வேண்டும்.
இந்த சம்பவம் பற்றி முழுமையான அறிக்கை கிடைக்காத நிலையில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, நடிகரான ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தெரியாது.  வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய் விட்டார்.  மத்திய அரசுக்கு எதிராக தனிப்பட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்