#BREAKING: பெண் காவலர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்!

Default Image

பெண் காவலர்களுக்கான நவரத்ன என்ற பெயரில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர், ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன்பின் பேசிய முதல்வர் ஆண்கள், பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும், இது பொன் விழா அல்ல, பெண் விழா. பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டியை பிடுங்கி புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் என பேசிய முதலமைச்சர், பெண் காவலர்களுக்கான நவரத்ன என்ற பெயரில் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்:

  • பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் கலைஞர் காவல் கோப்பை விருது வழங்கப்படும்.
  • காவல் குழந்தைகள் காப்பகம் மேம்படுத்தப்படும்.
  • காவல்துறையில் பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
  • ரோல்கால் எனும் காவல் அணி வகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என மாற்றப்படும்.
  • சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தாங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும்.
  • பெண்களுக்கு துப்பாக்கிசூடும் போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டு, விருது, பரிசுகள் வழங்கப்படும்.
  • அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை அமைத்து தரப்படும்.
  • டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனை குழு உருவாக்கப்படும்.
  • பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்