அமமுக அமைப்பு செயலாளர் கே.கே.சிவசாமி அதிமுகவில் இணைந்தார்!

Default Image

அமமுக அமைப்பு செயலாளர் கே.கே.சிவசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவை நாடும் நிர்வாகிகள்:

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து வருகின்றனர்.

பாஜகவை தொடர்ந்து அமமுக:

பாஜகவினரை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு அக்கட்சி தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனங்களை தெரிவித்து விமர்சித்து இருந்தனர். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் எதிர்வினையாற்றினர். இந்த சமயத்தில், பஜவினரை தொடர்ந்து அமமுக நிர்வாகிகளும் அதிமுகவில் இபிஎஸ் அணியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமமுக நிர்வாகிகள்:

அந்தவகையில், மார்ச்12 அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அமமுக அமைப்பு செயலாளர்:

இதையடுத்து, மார்ச்.13 அமமுக    மாநில இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.சிவசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்