பாரதிராஜா பட தயாரிப்பாளர் ஜெய்குமார் காலமானார்.! கண்ணீர் மல்க அஞ்சலி…
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். தற்போது, அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பாரதிராஜா உருக்கமாக கண்கலங்கினார்.
மேலும், அவருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சித்ராலட்சுமணன் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர்ஏ.சி.சண்முகம் போன்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.